OV(FZE) Tutoring Services,தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது . தமிழ் வகுப்புகள் ,தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ் மொழி கற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான சீரான பாடத்திட்டத்தை வழங்குகிறோம். துவக்க நிலை முதல் உயர் நிலை வரை, உங்கள் குழந்தையின் தமிழ் மொழி கற்கும் பயணத்தில் ஒவ்வொரு படியிலும் சிறந்த கல்வியை வழங்குகிறோம்.
இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்கு முன், தானே பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைக் கல்வி என்ற பகுதியில் பாடங்கள் தரப்பட்டுள்ளன. இதில், எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள், ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக வழங்கப்படுகின்றன.
சான்றிதழ்க் கல்வி தமிழ் நாடு அரசின் கல்வித் திட்டத்தின் படி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்க் கல்வித் திறனை வழங்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இது சான்றிதழ், மேற்சான்றிதழ் ஆகிய நிலைகளில் கீழ்க்காணுமாறு வழங்கப்படுகின்றது.
வரிசை எண் | பாடத்திட்டம் | குறைந்தபட்ச வயது வரம்பு |
---|---|---|
சான்றித்ழ்க் கல்வி | 5 வயது | |
2 | அடிப்படை நிலை | 7 வயது |
3 | இடை நிலை | 9 வயது |
4 | மேல் நிலை | |
மேற்சான்றிதழ்க் கல்வி | ||
1 | நிலை 1 | 11 வயது |
2 | நிலை 2 | 13 வயது |
3 | நிலை 3 | 15 வயது |
எழுத்துகள் அறிமுகம், சொற்களைக் கற்றல், சிறு தொடர் கற்றல், எழுதும் பயிற்சி, மழலைப் பாடல்கள், அறநெறிக் கதைகள் ஆகியப் பாடப்பொருகள் இதில் அடங்கும்.
சொல், பொருள், தொடர், இலக்கணம் ஆகிய மொழிக் கூறுகள்- கேட்டுக் கற்றல், படித்துக்கற்றல், பேசிக்கற்றல், எழுதிக்கற்றல் ஆகிய திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 20 தலைப்புகளில் பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும் மேல் நிலைப் பாடங்களுக்கான முன் தகுதியாகவும் இப்பாடங்கள் உருவமைக்கப்பட்டுள்ளன.
அறிவியல் கட்டுரை, பயணக்கட்டுரை, இலக்கியக் கட்டுரை, கடிதம், நேர்காணல், நாடகம், உரையாடல், சிறுகதை, வருணனை, இதழியல் பயன்பாடு போன்ற உரைநடைத் தமிழ் ; வாழ்த்துப்பாடல், நாட்டுப்புறப்பாடல், அறவுரைப்பாடல், மறுமலர்ச்சிப் பாடல், தொடர்நிலைச் செய்யுள், பல்சுவைப்பாடல் போன்ற கவிதைத் தமிழ் ஆகியவற்றில் திறன்களை வளர்க்கும் வகையில் கீழ்க்காணும் 18 தலைப்புகளில் மேல் நிலைப்பாடங்கள் அமைகின்றன. இதனுள் மொழிப்பயன்பாட்டிற்குத் துணையான மரபியல் இலக்கணப் பாடங்களும் தரப்படுகின்றன. மேல்நிலைப் பாடங்கள்- இடைநிலைப் பாடங்களின் தொடர்ச்சியாகவும், தமிழகப் பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பு வரையிலான திறன்களைத் தழுவியனவாகவும் அமைந்துள்ளன.
மாணவர் அவரவர் தகுதி நிலைக்கேற்பச் சான்றிதழ் மற்றும் மேற்சான்றிதழ்க் கல்வியின் எந்த நிலையில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.
சான்றிதழ்க் கல்வி ( 3 நிலைகளில் வழங்கப்படுகிறது ) | |
---|---|
அடிப்படை நிலை (1 & 2 வகுப்புகள்) | 30AED |
இடைநிலை (3 & 4 வகுப்புகள்) | |
மேல்நிலை (5 & 6 வகுப்புகள்) |
தேர்வுக் | |
---|---|
ஒரு தாள் / நிலை / ஒவ்வொரு முறை தோன்றுவதற்கு | 20AED |
தாமதக் கட்டணம் | 20AED |
நகல் சான்றிதழ்க் கட்டணம் | 40AED |
EXAM CENTRE, MATERIALS( SOFT COPY) | 150AED/year |
TERM 1 APRIL - JUNE | TERM 2 SEPTEMBER - DECEMBER | TERM 3 JANUARY - MARCH |
---|---|---|
No of classes - 20 Min Attendance -15 | No of classes - 30 Min Attendance -25 | No of classes - 20 Min Attendance -15 |
FEES - 250AED | FEES - 375AED | FEES - 250AED |
KIDS CLUB WEEKLY ONCE ( TAMIL,ENGLISH,MATH ) |
GROUP ACTIVITIES MONTHLY |
---|---|
LISTENING | E-MAGAZINE |
READING | COMPETITIONS (PAID & NON PAID) |
SPEAKING | WORKSHOPS |
WRITING | SEASONAL ACTIVITIES |
KIDS VOLUNTEERING | PARENTS VOLUNTEERING | EVENTS(paid) |
---|---|---|
• LITTLE EDITOR • EVENT ORGANIZERS • REPORTERS |
• MAGAZINE EDITING • KIDS CLUB RESOURCES |
• TAMIL NEW YEAR ( TERM 1) • SOL VILAIYAATTU (TERM 2) • ANNUAL PRIZE DAY ( TERM 3) |